பிரபல நடிகை வீட்டில் ஐடி ரெய்டு, கத்தை கத்தையான நோட்டுகள்

கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து அங்கு நடித்து வந்த அவர், சலோ என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். பின்னர், விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். இது சூப்பர் ஹிட்டானது. பிசியாகிவிட்ட ராஷ்மி, தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் படம் மூலம் தமிழுக்கும் வந்தார்.


மகேஷ்பாபுவுடன் இவர் நடித்துள்ள சைலேரு நீக்கெவ்வரு என்ற தெலுங்கு படம் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ஹிட்டானது. இவர், தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்துவருகிறார். இதை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இவரது வீடு கர்நாடக மாநிலம் குடகுவில் உள்ள விராஜ்பேட்டில் உள்ளது. இங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நடிகை ரஷ்மிகா வீட்டில் இல்லை.


வீட்டில் இருந்த நகைகள், பணம், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர். அவர் வீட்டில் இருந்த கணக்கில் வராத ரூ.25 லட்சத்தை பறிமுதல் செய்தனர். நடிகை ரஷ்மிகா விளம்பர நிறுவனம் நடத்தி வருவதும், பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பதும் தெரியவந்துள்ளது. விராஜ் பேட்டையில்  ரஷ்மிகாவுக்கு சொந்தமான திருமண மண்டபத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து நேரில் வந்து இன்று விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.

அதன்படி பெங்களூரில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு தனது தந்தை மதன் மற்றும் ஆடிட்டருடன் இன்று காலை சென்ற ராஷ்மிகா, தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்தார்.


Popular posts
தர்மபுரி காரிமங்கலம் பெரியாம்பட்டியில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியை இயக்குனர் திரு PP ரவிசங்கர் மற்றும் பெரியாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு PL ஜெயலட்சுமி சங்கர் வழங்கினார்
Image
செங்கம் அருகே பக்கரி பாளையம் கிராமத்தில் நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை ஊராட்சிமன்றத் தலைவர் மல்லிகா தூதூமனியன் வழங்கினார்
Image
தேனி மாவட்டம் வழக்கறிஞர் கொலையில் சம்பந்தப்பட்ட பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டார்
Image
அன்னவாசல் ஒன்றிம் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் புதூர் ஊராட்சி பகுதிகளில் கொரணா வைரஸ் தடுப்பு முயற்சியாக கபசூரக் கசாயம் வழங்கப்பட்டது
Image